பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சாிக்கை!!

 
Published : Oct 16, 2016, 02:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சாிக்கை!!

சுருக்கம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், தீவிரவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயங்கரவாத குழுக்களையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான்  உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க பாகிஸ்தானிற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

பாகிஸ்தான்  மண்ணில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ள பயங்கரவாத குழுக்களை அழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!
பூமியின் எந்த மூலையிலும் இணையம்.. LVM3 ராக்கெட்டில் இமாலய சாதனை படைத்த இஸ்ரோ