பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரிக்ஸ் மாநாடு - கோவாவில்இன்று தொடக்கிறது

First Published Oct 16, 2016, 2:00 AM IST
Highlights



பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது. இதனையடுத்து கோவா மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜிங்பின், பிரேசில் அதிபர் மைக்கேல் டெர்மர் ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்களிடம் பிரதமர் மோடி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் நடந்த உரி தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்நிலையில், கோவாவில் இன்று தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி, தீவிரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே கோவா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பானாஜி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், இன்று கோவா வருவதால், மாநில போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

click me!