
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததையடுத்து பெட்ரோல்,டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல்,டீசல் விலையை அவ்வப்போது உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை பெரும்பாலும் உயர்த்தியே வந்தன.இது தவிர இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற,இறக்கங்களும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் காரணிகளாக உள்ளன.
இந்நிலையில் பெட்ரோல் ,டீசல் விலையை அதிரடியாக குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.91 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 15க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.