
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விமானி ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு இயக்குநராக பதவி வகித்து வருபவர் அரவிந்த் கத்பலியா... விமானியான இவர் பல முறை மருத்துவ சோதனைகளை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம், கத்பலியாவை பணியிடை நீக்கம் செய்தது.
மேலும் அவரது விமான ஓட்டுநர் உரிமத்தை 3 மாத காலம் ரத்து செய்ததாகவும் அறிவித்தது.
இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல் தலைவராக அரவிந்த் கத்பலியாவை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆனால் இதற்கு அனைத்து விமானிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்பில் அரவிந்த் கத்பலியா நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வி்மானத்தை இயக்குவதற்கு முன்பு சுவாசப் பரிசோதனையை மேற்கொள்வதை அவர் வேண்டும் என்றே தடுத்திருக்கிறார்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.