"செல்லாது ரூபாயை எப்படி பெட்ரோல் நிலையத்தில் பயன்படுத்தலாம்?" - டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

 
Published : Nov 21, 2016, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
"செல்லாது ரூபாயை எப்படி பெட்ரோல் நிலையத்தில் பயன்படுத்தலாம்?" - டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சுருக்கம்

மத்திய அரசு ரூ.500, ரூ1000 நோட்டை செல்லாது என அறிவித்த பின், எப்படி மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பழைய ரூபாய்களை பயன்படுத்த அனுமதிக்கமுடியும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

மனு

டெல்லியில், ‘டிசைனர் ஷோரும்’ கடை நடத்திவரும் பூஜா மஹாஜன் என்ற பெண் இந்த மனுவை  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மேலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டும் சட்டவிரோதமானது, சட்டத்துக்கு எதிரானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, நீதிபதிகள் பி.டி. அகமது மற்றும் ஜெயந்த் நாத் தெரிவித்துள்ளனர். மனுதாரர் பூஜா மஹாஜன் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.மைத்திரி மற்றும்ராதிகா சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகிறார்கள்.

பூஜா மஹாஜன் தனது மனுவில் கூறியிருப்பதாவது-

எப்படி முடியும்?

மத்திய அரசு கடந்த 8-ந்தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. அதேசமயம், மருத்துவமனைகள், விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள், பால் வழங்கும் நிலையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் பழைய ரூபாய்களை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. அரசு செல்லாது எனத் அறிவித்த பணத்தை  இந்த இடங்களில் பயன்படுத்த எப்படி அனுமதிக்க முடியும்.

உரிமைமீறல்

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் என்னுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது எனது அடிப்படை உரிமையை மீறும் வகையில் இந்த உத்தரவு இருக்கிறது. 
 

அதுமட்டுமல்லாமல் அரசு இரு நிலைப்பாட்டை இந்த உத்தரவில் எடுத்துள்ளது. ஒரு புறம், மக்களை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் என்றும், மறுபுறம் ரூ.2.50 லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்தால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் மிரட்டி வருகிறது.

முரண்

நவம்பர் 8-ந் தேதிக்கு பின், ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ஆணைகளும் செல்லாது என உத்தரவிட வேண்டும். இது ரிசர்வ் வங்கி சட்டத்துக்குமுரணாக அமைந்துள்ளது.

ரிசர்வ் வங்கிச்சட்டம் பிரிவு 24ன்படி, பல்வேறு மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி மற்றும் மத்தியஅரசு அதிகாரம் உண்டு என உட்பிரிவு (1) மற்றும் (2) தெரிவிக்கிறது. ஆனால்,  ரூ.500, ரூ1000  நோட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 24 உட்பிரிவு(2)ன்படி அரசு எந்த அறிவிப்பானையும் அறிவிக்கவில்லை. மேலும், மக்களின் புழக்கத்துக்குவிடப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் நோட்டும் பிரிவு(1)க்கு எதிரானதாகும்.

சட்டவிரோதமானது

மக்களின் கையில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, மற்றும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை புழக்கத்தில் விட்டது ஆகிய அரசின் முடிவுகள் சட்டவிரோதமானது, தன்னிச்சையானது . இது தொடர்பாக நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் அவசரம் கருதி உடனடியாக விசாரணைக்கு எடுக்க வழக்கறிஞர்கள் மனுவில் தெரிவித்திருந்ததையடுத்து இன்று விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்