பேங்க்-ல ஓ.டி வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கான புது சலுகை இதோ..!!!

 
Published : Nov 21, 2016, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
பேங்க்-ல ஓ.டி வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கான புது சலுகை இதோ..!!!

சுருக்கம்

வங்கியில் அதிகப்பற்று(ஓ.டி.) மற்றும் கடன் பெற்று இருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன், வங்கியில் அதிகப்பற்று வைத்து இருப்பவர்கள் மட்டுமே வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம் என அனுமதி அளித்து இருந்த நிலையில், இப்போது வங்கியில் கடன் பெற்று இருப்பவர்களும் எடுக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ரிசர் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ வங்கியில் அதிகப்பற்று வைத்து இருப்பவர்கள் மட்டும் வாரத்துக்கு ரூ.50 வரை பணம் எடுக்கலாம் என அனுமதி, இனி, வங்கியில் ரொக்க கடன் பெற்று இருப்பவர்களுக்கும் பொருந்தும். அதேசமயம், தனிப்பட்ட கணக்கில் அதிகப்பற்று வைத்து இருப்பவர்கள் இதில் எடுக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  நடப்பு கணக்கு அல்லது அதிகப்பற்று மற்றும் ரொக்கக் கடன் பெற்று வங்கியில் கடந்த 3 மாதங்களாக பரிமாற்றம் செய்து வருபவர்களும் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம்வரை பணம் எடுக்க முடியும். இந்த பணம் அனைத்தும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மூலம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்