“வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது-பிரித்வி-II ரக ஏவுகணை”

Asianet News Tamil  
Published : Nov 21, 2016, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
“வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது-பிரித்வி-II ரக ஏவுகணை”

சுருக்கம்

ஒடிசாவில் பிரித்வி-2 ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

பிரித்வி-2 ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரித்வி-2 ஏவுகணையில்
இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் சில மாற்றங்களை செய்துள்ளது.

அதாவது, பிரித்வி-2 ஏவுகணைகளில் 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை வைத்து பயன்படுத்த முடியும்..

அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும் இந்த ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயங்கும் இரட்டை என்ஜின்கள் கொண்டது. இதனால், 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திட்டமிட்ட இலக்கை துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து பிரித்வி-2 ஏவுகணை இன்று காலை இருமுறை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. 

இந்த இரு சோதனைகளும் வெற்றிகரமாக நடந்தது என்றும், குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது என இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நடுக்கத்தை காட்டியும் அடங்காத பாகிஸ்தான்.. இந்தியாவை சீண்டினால் அழிவுதான்.. ராணுவத் தளபதி எச்சரிக்கை..!
இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!