“நெருங்குகிறது 1-ம் தேதி..!!!” – முழு சம்பள பணத்தையும் வங்கிகளில் எடுக்க முடியுமா....???

 
Published : Nov 21, 2016, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
“நெருங்குகிறது 1-ம் தேதி..!!!” – முழு சம்பள பணத்தையும் வங்கிகளில் எடுக்க முடியுமா....???

சுருக்கம்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், தங்களது பணத்தை வங்கிகளிலிருந்து எடுக்க முதலில் ஒரு நாளுக்கு 4,500 ரூபாய் வரையும், பிறகு 2000 ரூபாய் வரை மட்டும் தான் எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

 வேலைக்கு சென்று வங்கிகள் மூலம் சம்பளம் பெறுவோர் தங்களது பணத்தை முழுவதுமாக வங்கிகளிலிருந்து எடுக்க முடியுமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், வங்கிகளில் சம்பளத் தொகையை முழுவதுமாக எடுக்க முடியாது என்றும், தற்போது உள்ள சூழலில் ஒரு வாரத்தில் அதிகபட்சம் 24 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மாத ஊதியம் பெறுவேர் மட்டும் அல்லாமல், ஒரு தனிநபர் உரிய ஆவணங்களளோடு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அவரது கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். ஆனால்50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு பான் கார்டு கட்டாயம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்