
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்தரி மோடி, கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைக்காக 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றகுளிர்கால கூட்டத் தொடரில், இதற்கான கேள்வியை எழுப்பிய எதிர்கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டது. இன்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.