பட்டைய கிளப்பும் மத்திய அரசு..! பெட்ரோல் டீசல் விலை குறித்து இப்படி ஒரு முடிவு..!

By thenmozhi gFirst Published Jan 2, 2019, 2:45 PM IST
Highlights

இனி வரக்கூடிய நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் சரிவு இருக்கும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பட்டைய கிளப்பும் மத்திய அரசு..! பெட்ரோல் டீசல் விலை குறித்து இப்படி ஒரு முடிவு..! 

இனி வரக்கூடிய நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் சரிவு இருக்கும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வந்த நிலை மாறி தற்போது தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வருகிறது. இதன்படி சில நாட்களுக்கு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.. சில நாட்கள் சற்று குறைவாக காணப்படும். இருந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீப காலமாக மளமளவென உயர்ந்து வந்தது மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத்தான் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ்  எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியது.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 80 லிருந்து, தற்போது ரூபாய் 70 அடைந்துள்ளது.

இந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சுத்திகரிப்பு திறனை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும்,  இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயர்ந்து  இருந்தாலும், அதன் தாக்கம் இந்தியாவில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத அளவிற்கு பார்த்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்து உள்ளார்.

ஆக இனி வரும் காலங்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைவு ஏற்படலாம் என்கிறது கணிப்பு.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 66.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன. இந்த விலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் காலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 50 தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

click me!