பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு…இன்று நள்ளிரவு முதல் அமல்....

Asianet News Tamil  
Published : May 31, 2017, 10:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு…இன்று நள்ளிரவு முதல் அமல்....

சுருக்கம்

pertrol price hike one rupee 23 paise - Diesel price hike by 89 paise

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு…இன்று நள்ளிரவு முதல் அமல்…

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 23 காசும்,  டீசல் விலை 89 காசுகளும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாலும் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் 15 நாள்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன் அடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது என எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு
1 ரூபாய் 23 காசும்,  டீசல் லிட்டருக்கு 89 பைசாவும்  உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் வரிகளுடன் சேர்த்து மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விலை உயர்வு மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

செம காண்டு.. கழுதைய வச்சு இழுத்தும் யூஸ் இல்ல.. ஷோரூம் முன்பே ஆட்டோவை கொளுத்திய இளைஞர்!
சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பிலிருந்த துப்பாக்கி வெடித்து NRI இளைஞர் உயிரிழப்பு!