யு.பி.எஸ்.சி. தேர்வில் கர்நாடகவைச் சேர்ந்தநந்தினி முதலிடம்...தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகனுக்கு 21-வது இடம்….

First Published May 31, 2017, 9:32 PM IST
Highlights
UPSC karnataka Nandhini get first rank


மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணயம் சார்பில் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.ஆர். நந்தினி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதாப் முருகன் 21-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணயம்ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் முதனிலைத் தேர்வு, பிரதானம், நேர்முகம் என 3 பிரிவுகள் உள்ளன. இதில் தேர்வாகும் நபர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் பல பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in என்ற முகவரியில் வௌியிடப்பட்டன. இதில் 1,099 பேர்   பல்வேறு பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். 220 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.ஆர். நந்தினி அகிலஇந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தைஅன்மோல் ஷெ ர்சிங் பேடியும், மூன்றாம் இடத்தை ரோனங்கியும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பிரதாப் முருகன் தேசிய அளவில் 21 இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

tags
click me!