பைக், கார்ல பெட்ரோல் நிரப்பி வெச்சுக்குங்க…..ஞாயிறுதோறும் லீவு விடப் போறாங்களாம்…

First Published Apr 11, 2017, 8:44 AM IST
Highlights
Pertol bunk holoday


டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்திக் தரக்கோரி இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்திலும் பெட்ரோல் நிலையங்களுக்கும் விடுமுறை விடப்போவதாக பெட்ரோல்-டீசல் விற்பனை மைய கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி  எரிபொருள் உபயோகத்தை குறைத்துக் கொள்ளக் கூறியுள்ளதால், அவரின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து வாரத்தில் ஒருநாள் பெட்ரோல் நிலையங்களை மூடுவது என்று இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 இது குறித்து இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர்

ஏ.டி.சத்யநாராயணா கூறுகையில், “ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதனஅடிப்படையில், வரும் 14-ந்தேதி முதல் வாரந்தோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார். 

அதேசமயம், அனைத்து இந்திய பெட்ரோல் டீலர்கள் அமைப்பின் தலைவர் அஜய்பன்சால் கூறுகையில், “ நாங்கள் எடுத்து இருக்கும் முடிவு நாடுமுழுமைக்கும் பாதிக்காது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த முடிவு இருக்கும். குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக பெட்ரோல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தரக்கோரி விடுத்திருந்த கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்டிருந்தார்கள். எண்ணெய் நிறுவனங்களும் கமிஷன் தொகையை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற வேலை நிறுத்தத்தை பெட்ரோல் நிலைய டீலர்கள் அறிவித்திருந்தனர்.

 ஆனால் எண்ணெய் நிறுவனங்களின் பேச்சு, வாக்குறுதியையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 மாதமாக கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை என்பதால், வரும் 14-ந்தேதியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைவிட பெட்ரோல் நிலைய டீலர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இது குறித்து பெட்ரோல்நிலைய டீலர்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் ரவி ஷிண்டே கூறுகையில், “ கடந்த ஜனவரி மாதம் இதோபோன்று போராட்டம் நடத்த தொடங்கியபோது, அரசு எண்ணெய் நிறுவனங்கள் அளித்த வாக்குறுதியின்பேரில் போராட்டத்தை திரும்பப்பெற்றோம். ஆனால், கடந்த 4 மாதங்களாக கமிஷன் உயர்த்தப்படவில்லை.

 ஆதலால், வரும் 14 ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை முதல் விடுமுறைவிட திட்டமிட்டுள்ளோம். மேலும், மே10-ந்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 10மணிநேரம் மட்டுமே வேலை பார்ப்பது என்றும் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தார். 

 

click me!