Paytm FASTags : ஏற்கனவே உள்ள Paytm FASTags கணக்கில், உள்ள இருப்பைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தப்படலாம். ஆனால் மார்ச் 15க்குப் பிறகு எந்த டாப்-அப்களும் அனுமதிக்கப்படாது.
Paytm Payments Bank அதன் செயல்பாடுகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து வருகின்ற பிப்ரவரி 29 முதல், Paytmன் கூட்டாளியான Paytm Payments வங்கி, அதன் கணக்கில் அல்லது அதன் வாலட்டில் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ஜனவரி மாதம் மத்திய வங்கி உத்தரவிட்டது. அந்த காலக்கெடு இப்போது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 15க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள், ஃபாஸ்டேக்குகள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் போன்றவற்றில் டெபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
ஏற்கனவே கைவசம் உள்ள Paytm FASTags கணக்கில் உள்ள இருப்பைப் பயன்படுத்தி டோல்களுக்கு கட்டணம் செலுத்தப் பயன்படுத்தப்படலாம், ஆனால் மார்ச் 15க்குப் பிறகு எந்த டாப்-அப்களும் அதில் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி Paytm FASTagஐ செயலிழக்க செய்வது எப்படி?
1800-120-4210 என்ற எண்ணிற்கு டயல் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் வாகனப் பதிவு எண் (VRN) அல்லது டேக் ஐடியை வழங்கவும். Paytm வாடிக்கையாளர் சேவை மைய முகவர் உங்கள் FASTag மூடப்பட்டதை உறுதி செய்வார். இது ஒரு வழி, அல்லது மற்றொரு வகையிலும் நீங்கள் இதை செய்யமுடியும்.
முதலில் Paytm செயலியை திறந்து சுயவிவர ஐகானைத் கிளிக் செய்யவும், "உதவி & ஆதரவு" (Help & Support) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின் "வங்கி சேவைகள் & பெமென்ட்ஸ் "FASTag" என்பதற்குச் செல்லவும். "Chat with Us" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்யும்படி நிர்வாகியிடம் கோரவும். அவர் அதை செய்துவிடுவார்.
ஆன்லைனில் புதிய FASTagஐ வாங்குவது எப்படி?
Google Play Store அல்லது Apple App Storeலிருந்து "My FASTag" செயலியை பதிவிறக்கம் செய்து, e-commerce இணைப்பை அணுக "Buy FASTag" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு FASTagஐ வாங்கவும், அது உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.
ஆன்லைனில் உங்கள் FASTagஐ எவ்வாறு செயல்படுத்துவது?
உங்கள் முகவரிக்கு FASTag வந்தபிறகு, "My FASTag" செயலியை திறந்து "FASTagஐச் செயல்படுத்து" என்பதைக் கிளிக் செய்யவும். Amazon அல்லது Flipkart ஐத் தேர்ந்தெடுக்கவும். FASTag ஐடியை உள்ளிடவும் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.