100 ரூபாய்க்கு சாப்பிட்டால் 28 ரூபாய் தண்டம் - புலம்பும் பொதுமக்கள்.. வாட்டும் GST!!

 
Published : Jul 01, 2017, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
100 ரூபாய்க்கு சாப்பிட்டால் 28 ரூபாய் தண்டம் - புலம்பும் பொதுமக்கள்.. வாட்டும் GST!!

சுருக்கம்

People are lament about the GST for hotel

நாடுமுழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியால்(ஜி.எஸ்.டி.) ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுவது, வங்கிசேவை, நிதிச்சேவை, இன்சூரன்ஸ் கட்டணம், கிரெடிட் கார்டு கட்டணம் ஆகியவை அதிகரித்துள்ளது.

மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு , அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஏ.சி. அல்லாத ஓட்டல்களில் சாப்பிடும்போது அதற்கு வரியாக 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏ.சி. அல்லாத ஒட்டல்களில் சாப்பிடும்போது வரி இல்லை.

இதனால், ஒரு ஓட்டலில்களில் சாப்பிடும் நடுத்தரமக்கள் ரூ. 50க்கு ஒரு பொங்கள், ஒரு காபி சாப்பிட்டால் ரூ.75 கட்டணம் முன்பு செலுத்தினார்கள். ஆனால், இப்போது, 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டு, ரூ.83 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது.

ஜி.எஸ்.டி. வரிக்கு அமலுக்கு முன்பாக ஏ.சி. ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு சேவை வரி உள்ளிட்ட 20.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜி.எஸ்.டி. வரியில் இந்த வரி 18சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏ.சி. ஓட்டலில் ஒருவர் ஒரு காபி, ஒரு பொங்கல் சாப்பிட்டால் ரூ. 75 கட்டணமும், கூடுதலாக சி.ஜி.எஸ்.டி. வரி 9.9 சதவீதம், எஸ்.ஜி.எஸ்.டி.வரி 9.9 சதவீதம் என ரூ.13.50 வரியாக செலுத்தி மொத்தம் ரூ.88.50 பில் செலுத்த வேண்டும்.

இதனால், ஏ.சி. அல்லாத ஓட்டல்களில் சாப்பிடும் நடுத்தர குடும்பத்து மக்கள் வரி செலுத்துவதை நினைத்து புலம்பி வருகின்றனர். அதேசமயம், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த ஒருநாளில் ஓட்டலில் உணவுகளுக்கான மூலப்பொருட்களாகன விலை குறித்த பாதிப்பு உடனடியாக தெரியவில்லை. இது அடுத்த சில வாரங்களில் வௌிப்படும் போது, உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!