
நமக்கெல்லாம் விபரம் தெரிஞ்ச நாள்ள இருந்து எந்த எக்ஸாம்லேயும் இப்படி ‘பிராவை கழட்டி வெச்சுட்டு வந்து எழுதுமா’ என்று சூப்பர்வைஸர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் இது நடந்தது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு நீட் தேர்வு மையத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு இப்படியொரு துயரம் நடந்தது. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது பிராவிலிருந்த ஹூக் பீப் சப்தம் எழுப்பவே, பிராவை கழற்றிவிட்டு வர சொல்லி அருமையான உத்தரவை போட்டு மாணவியை ஆட்டம் காண வைத்தனர் கண்காணிப்பாளர்கள்.
அழுதபடியே அதை செய்துவிட்டு தேர்வை முடித்த அந்த பெண் , பிறகு வெளியே வந்து மீடியாவிடம் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்துவிட்டு குமுறி தள்ளினார். தேசம் முழுக்கவே இந்த விவகாரம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.
சில பொது நல வழக்குகளும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கையை எதிர்பார்த்து தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ.க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். பின் விரிவான விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் அந்த பொண்ணை பிரேசியரை கழட்ட சொன்ன பெண் தேர்வு கண்காணிப்பாளர்களை பிடிச்சு உள்ளே போட சொல்லி கோரிக்கை குரல்கள் நாடெங்கிலும் வெடிக்கத் துவங்கியுள்ளன.
உடனே பண்ணுங்க சார்!