
கேரள மாநிலம் கண்ணூரிலி நீட் தேர்வின்போது மாணவிகளை பிராவை கழட்ட அகற்றச் சொன்ன விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தலைவருக்கு மனித உரிம ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி நடந்தது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் பங்கேற்றவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவ-மாணவிகள் முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் அவரது உள்ளாடையை அகற்ற வேண்டுமென தேர்வு கண்காணிப்பாளர் கூறினார்.
இதனால் அந்த மாணவி, உள்ளாடையை அகற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுதச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்த கேரள மாநிலம் ககாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஜோசப் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் கொன்னது மாணவிகளிடையே அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் இது குறித்து 4 வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னது தொடர்பாக சம்பவம் அரங்கேறிய பள்ளியை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு, பள்ளியின் முதல்வர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.