
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இருந்தால், மட்டுமே சலுகைகள் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை எண்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், கேஸ் மானியம் உள்பட முக்கிய அத்தியாவசி ஆவணங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நாகஸ்வரராவ் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆதார் அட்டை எதிர்ப்பு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, நாகேஸ்வரராவ், விலகி கொண்டார். முன்னதாக மத்திய அரசு சார்பில் அவர் வழக்கறிஞராக ஆஜரானதால், அவர் விலகியதாக கூறப்படுகிறது.