ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
இதனிடையே ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அவர், வாக்காளர்களுக்கு பரிசுகளை விநியோகிப்பதை நான் காண்கிறேன். இதுவரை சுமார் ரூ.1,000 மதிப்புள்ள குக்கர், மிக்சி போன்ற சமையலறை உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் சேர்த்து ரூ.3,000 தான். நாங்கள் உங்களுக்கு ரூ.6,000 தருகிறோம்.
இதையும் படிங்க: கலக்கத்தில் உள்ள அரசியல் குடும்பம் முதல் கேரள அரசு கொடுத்த ஷாக் வரை.. அரசியல் கிசுகிசு
தராவிட்டால் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு நீர்ப்பாசன அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். மேலும் எங்கள் கட்சியில் இதுபோன்ற விஷயங்களுக்கு இடமில்லை. எங்கள் கட்சி ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஒருவர் அறிக்கை கொடுத்தால் அது கட்சியின் அறிக்கை அல்ல. அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்தார். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.