மேற்கு வங்க அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்… அம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jul 28, 2022, 4:41 PM IST
Highlights

மேற்கு வங்க எஸ்எஸ்சி ஆட்சேர்ப்பு ஊழலில் கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க எஸ்எஸ்சி ஆட்சேர்ப்பு ஊழலில் கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மேற்குவங்க மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த அமலாக்கத்துறை கடந்த வாரம் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் சோதனை மேற்கொண்டது. அப்போது 20 கோடி ரூபாய் ரொக்கம், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க: பார்த்தா சாட்டர்ஜியை நீக்க முதலில் டுவீட்; திடீரென பல்டி அடித்த மூத்த தலைவர்; என்ன நடந்தது?

இதைத் தொடர்ந்து 26ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பார்த்தா, நடிகை அர்பிதாவை அருகருகே அமர வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பர்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில் அவருக்கு எங்கெல்லாம் சொத்துக்கள், வீடுகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜ்டங்கா பகுதியிலும், பெல்ஹாரியாவிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு சாட்டர்ஜிக்கு சொந்தமான வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால், அதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பூட்டை உடைத்து சென்று ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வில் கட்டுக்கட்டாக ரூ.28 கோடி ரொக்கப்பணம், நகைகள் ஆகியவற்றை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதையும் படிங்க: ரூ.28 கோடி பணம், தங்க நகைகள்: பர்தா சாட்டர்ஜிக்கு வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு பறிமுதல்

கடந்த 5நாட்களுக்கு முன் சாட்டர்ஜிக்கு சொந்தமான வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல முக்கிய ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான குணால் கோஷ் பார்த்தா சாட்டர்ஜியை கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில், கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!