
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரனை விடுவிக்க கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை 2 வாரத்திற்குள் பரிசீக்க உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன்,சாந்தன்,முருகன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்கக்கோரி அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரன் தாயார் மனுவை உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனுவை 2 வாரத்திற்குள் பரிசீலித்து பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.