ஜூலை 18-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் : முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்

 
Published : Jun 25, 2018, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஜூலை 18-ல் நாடாளுமன்ற  கூட்டத்தொடர் : முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்

சுருக்கம்

The Monsoon Session of Parliament will be held from July

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ல் தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்க உள்ளது. நாடாளுமன்றம் கூட்டம் நடத்துவது பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மேலும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.  

இந்த கூட்டத்தொடரில் முத்தலாக், திருநங்கைகள் மேம்பாட்டு மசோதா உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே இந்த கூட்டத் தொடரை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!