ஸ்மார்ட் போனுக்காக நடந்த பயங்கரம்...! தந்தையை கொடூரமாக கொன்ற மகன்!

 
Published : Jun 25, 2018, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஸ்மார்ட் போனுக்காக நடந்த பயங்கரம்...! தந்தையை கொடூரமாக கொன்ற மகன்!

சுருக்கம்

The son who killed the father

ஸ்மார்ட்போன் வாங்க பணம் கொடுக்காத தந்தையை மண்வெட்டியால்  வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில், குல்ககே கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ண குமார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் கிஷோர் திவாரி. 

கிஷோர் திவாரி, தனது தந்தையிடம், ஸ்மார்ட்போன் வாங்க பணம் கேட்டு வந்துள்ளார். கிருஷ்ண குமாரும், பணம் தருவதாக கூறி வந்துள்ளார். ஆனால், கிஷோர் திவாரி, செல்போன் வாங்க பணம் கொடுக்கும்படி தனது தந்தையை நச்சரித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கிஷோர் திவாரிக்கும் அவரது தந்தை கிருஷ்ண குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தனது தந்தையை கிஷோர் குமார் கடுமையாக திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி, கிஷோர் திவாரி அங்கிருந்த மண் வெட்டியை எடுத்து, தனது தந்தை கிருஷ்ண குமாரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரேதத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கிஷோர் திவாரி மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மண் வெட்டியால் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!