
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், திங்கள்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
கடந்த 9ம் தேதி இரவு 500,1000 செல்லாது என மோடி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. ரூபாய் நோட்டு விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அவை துவங்கியதும் எதிர்கட்சிகள், இதுகுறித்து கேள்வி எழுப்ப விரும்பினர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் அவை துவங்கியதும் எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வரும் திங்கள்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதவாக அறிவிக்கப்பட்டது.