
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் தொடங்கியது. மக்களவையில் அமீத்அன்சாரி, மாநிலங்களவையில் சுமித்ரா மகாஜன் ஆகியோர் தலைமையில் தொடங்கியது. முன்னதாக, மறைந்த உறுப்பினர்களுக்கு இரு அவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதில், கருப்பு பணத்தை முடக்குவதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை, கையில் மை வைப்பது, பணத்தட்டுப்பாடு உள்பட பல்வேறு கேள்கிகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இதனால், இன்று நடக்கும் விவாதத்தின் போது, பெரும் பரபரப்பு நிலவும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன் கூட்ட தொடருக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குளிர் கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இதில் நல்ல விவாதங்கள் நடக்கும் என எதிர் பார்க்கிறோம். சாமான்ய மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, அனைத்து கட்சியினரும் புதிய யோசனைகளை கூறலாம் என்றார்.