நாடாளுமன்ற நடைமுறை தெரிய வேண்டுமா? - இதை படியுங்கள்

First Published Dec 30, 2016, 5:46 PM IST
Highlights


நாடாளுமன்ற நடைமுறை என்ன நாடாளுமன்ற சட்டமியற்றுதலில் பொதுமக்களின் பங்கு என்ன என்பதற்கான பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கான செய்தி இது:

ரூபாய் நோட்டு செல்லாஅது அறிவிப்பு , மார்ச் 31 க்கு மேல் பழை ரூபாய் தாள்களை வைத்திருந்தால் தண்டனை போன்ற பல்வேறு அவசர சட்டங்களை கொள்ளைபுறம் வழியாக மத்திய அரசு கொண்டு வருகிறது. பொதுமக்களை பாதிக்கும் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பை பற்றி விவாதிக்க கூட மறுக்கும் நிலை.

நாடாளுமன்றம் எதிர்கட்சிகளால் முடக்கப்படுகிறது எனபது போன்ற போலி தோற்றத்தை உருவாக்குவது. மறுபுறம் வாக்கு வங்கிக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்று கூறிக்கொண்டே, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று அறிவிக்கும் இரட்டை வேடம் இது போன்ற விவகாரங்களில் மக்களின் பங்களிப்பு பற்றிய பயிற்சி பட்டறையில் கலந்துகொள்பவர்கள் கீழ் கண்ட செய்தியை படிக்கலாம்..

நம் நாட்டு மக்களே ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது?

நாடாளுமன்றத்தின் அதிமுக்கியமான பணிகளில் ஒன்று சட்டமியற்றுவது. சட்டமியற்றுதலில் பொதுமக்களாகிய நாம. எவ்வாறு கலந்துக்கொள்வது?

இதுபோன்ற பல்வேறு கேள்விகள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருந்துவருகிறது. இவையனைத்திற்கும் விடைக்கானும் நோக்கில் 31/12/2016 (சனி) காலை 11 மணி முதல் 1 மணி வரை சட்ட பஞ்சாயத்து இயக்க தலைமை அலுவலகத்தில் பயிற்சிபட்டறை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் முற்றிலும் இலவசம்.

தொடர்புக்கு: 8870472174

தேதி: 31/12/2016,சனி

நேரம்: 11 மணி முதல் 1 மணி வரை

இடம்: சட்ட பஞ்சாயத்து இயக்க தலைமை அலுவலகம், தி.நகர்,சென்னை.

click me!