
பணமதிப்பிழப்பு நீக்கத்தின் விளைவை அடுத்த ஆண்டு பாருங்கள் என பட்ஜெட் உரையின் முன்னுரையில் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் இலக்குகள், அன்னிய செலவாணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது. பண மதிப்பு நீக்கத்தின் விளைவை அடுத்த ஆண்டு பாருங்கள் . நாட்டின் முக்கிய பொருளாதார காரணிகள் திருப்திகரமாக உள்ளது.
உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்தியாவில் திருப்தியாக உள்ளது. சரியான செயல் தோற்காது என்று காந்தி தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் நிதி கையிருப்பு அதிகரித்துள்ளது.
10 அம்சங்களை உள்ளடக்கியதாக பட்ஜெட் இருக்கும். கிராமப்புற முன்னேற்றம் , வறுமை ஒழிப்பு , டெக் இந்தியா போன்றவைக்கு முன்னுரிமை என அருண் ஜெட்லி தெரிவித்தார்.