தொடங்கியது பஞ்சாப், கோவா மாநில வாக்குப்பதிவு..வாக்காளர்கள் உற்சாகம்..

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 08:18 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
தொடங்கியது பஞ்சாப், கோவா மாநில வாக்குப்பதிவு..வாக்காளர்கள் உற்சாகம்..

சுருக்கம்

தொடங்கியது பஞ்சாப், கோவா மாநில வாக்குப்பதிவு..வாக்காளர்கள் உற்சாகம்..

பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இன்று முதல், அடுத்த மாதம் 8-ம் தேதி வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இவற்றில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

பஞ்சாபில், மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆயிரத்து 145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

1 கோடியே 98 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலையொட்டி 22,615 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், 5,500 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும் 800 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதேபோன்று கோவா மாநிலத்திலும், மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலையொட்டி ஆயிரத்து 642 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 வரை நடைபெறுகிறது.

பஞ்சாப் மற்றும் கோவா சட்டமன்றத் தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள், மார்ச் 11-ம் தேதி எண்ணப்படுகின்றன.

 

1

 

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்