
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் முதல், ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். குளிர்காலத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல், தீய செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எல்லைக் கட்டுப்பாடு கோடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஸ்மீர், காக்வால் பகுதியில் பாகிஸ்தானிய ட்ரோன் காணப்பட்டடாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அப்பகுதியில் இராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் பாதுகாப்பு படையினர், எல்லை கிராமங்களில் ட்ரோன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் ட்ரோனை மக்கள் கண்டிருந்தால், ஊடுவியது உண்மையாக இருந்தால் அது ஒரு கடுமையான பாதுகாப்புப் பிரச்சினையாக இருக்கலாம். குறிப்பாக ட்ரோன்கள் எல்லைப் பகுதியில் இருந்தால் எல்லை பாதுகாப்பு படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுக்க்கப்பட்டுள்ளது.
நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. ஆனால் உடனடியாக உள்ளூர் காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிப்பது முக்கியம் என அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கெனவே ட்ரோனை கண்ட சம்பவம் ஜூலை மாதம் பதிவாகியது. பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படை சில இடங்களில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை நிறுவியது. இந்த தொழில்நுட்பம் எதிரி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அனுமதிக்கிறது.