பாகிஸ்தானின் அடங்காத வெறி... சல்லி சல்லியாக போட்டுத்தள்ள இந்தியா உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2019, 1:05 PM IST
Highlights

பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் குண்டு வீசிய நிலையில் அத்துமீறும் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டுவீழ்த்த இந்திய விமானப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் குண்டு வீசிய நிலையில் அத்துமீறும் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டுவீழ்த்த இந்திய விமானப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை சூறையாடிய நிலையில், பாகிஸ்தான் விமானப்படையில் இந்திய எல்லையான நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானம், இந்திய விமானப்படையினரால் விரட்டி அடிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்திய ராணுவப்படை உள்ள ரஜோரி பகுதியில் குண்டு வீசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, காஷ்மீர் வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துமீறும் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நவ்சேரா பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானங்கள் விரட்டியத்து உள்ளது. இதனால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

click me!