"டெர்ரரிஸ்தான்’ ஆக மாறிவிட்ட பாகிஸ்தான்" ஐ.நா.வில் பகிரங்கமா குற்றம் சாட்டும் இந்தியா!!!

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
"டெர்ரரிஸ்தான்’ ஆக மாறிவிட்ட பாகிஸ்தான்" ஐ.நா.வில் பகிரங்கமா குற்றம் சாட்டும் இந்தியா!!!

சுருக்கம்

Pakistan Is Terroristan India Says In Strong Reply To Pak PM At UN

பாகிஸ்தான் என்பது தீவிரவாதிகளின் பூமியாக விளங்குகிறது. தீவிரவாதிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. பாகிஸ்தான் என்பதுடெர்ரரிஸ்தான் ஆக மாறிவிட்டது என்று ஐ.நா. அவையில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியது. 

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் பாகிஸ்தான் பிரதமர் சாகித்காகன் அப்பாசி இந்தியாவை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசினார். அவர் பேசுகையில், “ பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களை இந்தியா தூண்டிவிடுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்திய வீரர்கள் வந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்தபட்ச போரை இந்தியா தொடுத்து வருகிறது.

காஷ்மீரில் சுயாட்சிக்காக போராடி வரும் மக்களை கொடூரமாக இந்திய கட்டுப்படுத்தி அடக்கி வைத்து வருகிறது. காஷ்மீருக்காக ஐக்கிய நாடுகள் சபை தனியாக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கவில்லை. தீவிரவாதத்தால் ஏராளமா இழந்துள்ளோம், கட்டுப்படுத்த பல தியாகங்களைச் செய்துள்ளோம். ஆப்கானிஸ்தானில் ஏற்படும் அரசியல் சிக்கல்களுக்கு எங்களை குறைகூறுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதன்மைச் செயலாளர் ஈனம் கம்பீர் பேசினார். அவர் பேசியதாவது- 

ஏமாற்றுதல், மோசடி செய்தல், திரித்துப்பேசுதலை அடிப்படையாக வைத்து பாகிஸ்தான் பேசுவது, அவர்களின் அண்டை நாடுகளுக்கு மிகவும் தெரிந்ததுதான், மிகவும் பழக்கப்பட்டதுதான். உண்மைகளுக்கு மாற்றுகளை உருவாக்க அவர்கள் எடுக்கும் முயற்சி, உண்மைகளை மாற்றாது. 

சுருக்கமாக பாகிஸ்தானின் வரலாற்றைக் கூற வேண்டுமானால், பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பூகோளவியலாக இருக்கிறது. தீவிரவாதிகளின் பூமியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. தீவிரவாதிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இப்போது பாகிஸ்தான் என்பதுடெர்ரரிஸ்தான் ஆக மாறிவிட்டது. 

ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாஅமைப்பின் தலைவர் ஹபிஸ் முகமது சயத்துக்கு பாதுகாப்பு அளித்து, அவரை அரசியல் கட்சியின் தலைவராக அங்கீகரித்துள்ளது.

பாகிஸ்தானின் தீவிரவாதி எதிர்ப்புக் கொள்கை என்பது தீவிரவாதிகளுக்கு எதிரானது இருப்பதற்கு பதிலாக, அவர்களின் ராணுவ நகரங்களில் சர்வதேச தீவிரவாத தலைவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது அல்லது அவர்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்புகளை அளித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் என்பது எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். எல்லைத் தாண்டி தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் தூண்டிவிட்டு, இந்தியாவின் எல்லைப்புற நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிட்டு ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

கோடிக்கணக்கான டாலர்களை சர்வதேச தீவிரவாதத்துக்காக பாகிஸ்தான் திருப்பிவிட்டு செலவு செய்கிறது. தீவிரவாதிகளுக்கு தேவையான அபாயகரமான கட்டமைப்பு வசதிகளை அதன் சொந்த நாட்டிலேயே செய்து கொடுத்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு செலவு செய்யும் தொகைக்கு பாகிஸ்தான் நிச்சயம் விலை கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் உள்ள தீவிரவாதிகள்  தண்டனையில் இருந்து விலக்கு பெற்று ,தாங்கள் செய்த செயல்களுக்கு எந்தவிதமான தண்டனையையும் அனுபவிக்காமல் தெருக்களில் சுதந்திரமாக வலம் வருகிறார்கள்.அப்படி இருக்கும் போது, இந்தியாவில் மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அந்த நாடு பேசும் சொற்பொழிவை நாம் கேட்கிறோம்.

கருணை வழங்குவதில் தோல்வி அடைந்த ஓரு நாட்டிடம் இருந்து மனித உரிமை மற்றும் ஜனநாயகம் குறித்து  இந்த உலகத்துக்கு பாடங்கள் ஏதும் தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?