நள்ளிரவில் பாகிஸ்தான் செய்த திருட்டுத்தனம்… 12 இடங்களில் தாக்குதல்… 5 ராணுவ வீரர்கள் காயம் !! இந்தியா பதிலடி!!

Published : Feb 27, 2019, 07:08 AM IST
நள்ளிரவில் பாகிஸ்தான் செய்த திருட்டுத்தனம்… 12 இடங்களில் தாக்குதல்… 5 ராணுவ வீரர்கள் காயம் !! இந்தியா பதிலடி!!

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில், கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி, 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில், நேற்று அதிகாலை, பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது, இந்திய விமானப்படை விமானங்கள், குண்டுமழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், 350 பயங்கரவாதிகள் உடல் சிதறி பலியாகினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் நாங்கள் பதிலடி கொடுப்போம் என கொக்கரித்தனர். அதைப் போல நேற்று இந்திய எல்லையில் உள்ள 55 நிலைகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித்க்குதல் நடத்தியது. ஆனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் வீரர்கள் ஓடஓட விரட்டி அடித்தது.  

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல்  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான்  அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாகிஸ்தான் , நடத்தி வருகிறது. 

கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாக்கிஸ்தான்  ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வரிவிதிப்பு சிக்கல் முடிந்தது! இந்தியா-நியூசிலாந்து FTA-ஆல் ஏற்றுமதி-இறக்குமதி எளிதாகும்
வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!