எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் !! 55 இந்திய நிலைகளில் தாக்குதல்…. ஓட ஓட விரட்டியடித்த இந்திய ராணுவம் !!

Published : Feb 26, 2019, 08:41 PM IST
எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் !!  55  இந்திய நிலைகளில் தாக்குதல்….   ஓட ஓட விரட்டியடித்த இந்திய  ராணுவம் !!

சுருக்கம்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்கும் புகுந்து இந்திய ராணுவ விமானங்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பழிக்குப் பழியாக இந்திய எல்லையில் உள்ள 55  நிலையில்  சற்று முன் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை இந்திய விமானப்படை எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய  பாகிஸ்தான்  எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் எடுத்துள்ளோம் என  இதற்கு இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து எல்லையில் பதற்றம் காரணமான ராணுவம் உஷார் நிலையில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தியா எல்லையை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது நாங்கள் பதிலடியை கொடுப்போம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியது. 

முதலில் இந்தியா தரப்பில் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை, சேதம் எதுவும் கிடையாது என பாகிஸ்தான் கூறியது. ஆனால் பின்னர் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தது. ஆனால் இந்திய ராணுவம் சரியான அடியை அங்கு கொடுத்துள்ளது என்பது அந்நாட்டு செய்தியாளர்கள் வெளியிட்டுள்ள டுவிட் செய்திகள் உறுதி செய்துள்ளன..

இந்நிலையில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 55 இந்திய நிலைகளில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான தாக்குதலை நடத்தியுள்ளது. 

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.. இருதரப்பு இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய ராணுவம் பதிலடியை தீவிரப்படுத்தியுள்ளது .. 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!