
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதும் அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதும் என்பதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்த வேண்டும் என இந்தியா தரப்பில் பலமுறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டுள்ள போதும் அதை சற்றும் பொருட்படுத்தாத பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது.
நேற்று காலை நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் என்பவர் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அர்னியா பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இன்றும் சண்டை நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது பதிலடி கொடுத்து அவர்களின் அத்துமீறலை தகர்க்குமா?