பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – எல்லை பாதுகாப்பு வீரர் மரணம்

 
Published : Oct 24, 2016, 10:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – எல்லை பாதுகாப்பு வீரர் மரணம்

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான், ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் மேலும் ஒரு எல்லை பாதுகாப்பு வீரர் இறந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புரா பகுதிக்கு அருகே சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான், ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 20 எல்லை பாதுகாப்பு படை மற்றும் 5 ராணுவ முகாம்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் இறந்தார். எல்லை பாதுகாப்பு மற்றும் ராணுவ படையில் தலா ஒரு வீரர்கள் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!