சிந்து நதி உடன்படிக்கையை இந்தியா மீறி விட்டது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

First Published Dec 18, 2016, 1:46 AM IST
Highlights


புதிய அணைகள் கட்டுவதன் மூலம் சிந்து நதி உடன்படிக்கையை இந்தியா மீறியிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள 6 நதிகளின் நீரை பகிர்ந்து கொள்ளுவது தொடர்பாக சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தானது- இந்த நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதி உடன்படிக்கை தொடர்பாக நிலுவையில் உள்ள சர்ச்சை போதுமான நேரம் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவிலான தலையீடுகள் இல்லாமல் இரு தரப்பும் பேசி சமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும் என என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் கருத்து தெரிவித்தார். இதற்காக இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்தியா உடனான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது..இந்த ஒப்பந்தம் முற்று முழுதாக மதிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பிரதமரின் பேச்சாளர் டாரிக் ஃபடெமி 'டான்' நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

புதிய அணைகள் கட்டுவதன் மூலம் இந்த உடன்படிக்கையை இந்தியா மீறியிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

.

click me!