மீண்டும் தொடங்குங்கள்... மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் அதிரடி கடிதம்!

By vinoth kumarFirst Published Sep 20, 2018, 1:07 PM IST
Highlights

இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக விரைவில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக விரைவில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விரைவில் ஐக்கியநாடுகள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் ஆகியோர் சந்திப்பு ஏற்பாடு செய்யக்கோரி அந்த கடிதத்தில் இம்ரான்கான கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் அந்த பேச்சு மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று இ்ம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையே அமைதிப்பேச்சு நடக்கவில்லை, அதிலும் பதான்கோட் தாக்குதலுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் மோசமானது. இந்நிலையில், மீண்டும் அமைதிப்பேச்சை தொடங்க வேண்டும் என்றும் இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக தீவிரவாதம்,காஷ்மீர் பிரச்சினை போன்றவற்றை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று இம்ரான்கான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த மாதம் பிரதமர் மோடி அனுப்பிய கடிதத்துக்கு சமீபத்தில் டுவிட்டர் மூலம் இம்ரான்கான் அளித்த பதிலில், பாகிஸ்தான், இந்தயா  ஆகிய நாடுகள் இடைேய நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தையை தொடங்க இரு நாடுகளும் முன்னோக்கி நகர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!