விமான பயணிகளுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு... காது, மூக்கில் ரத்தம் வந்ததால் பரபரப்பு!

By vinoth kumarFirst Published Sep 20, 2018, 11:21 AM IST
Highlights

விமான நிலைய ஓடுபாதையில் இருந்து பறக்க தொடங்கிய விமானத்தில், சிறிது நேரத்தில் அதில் இருந்த பயணிகளின் காது, மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய ஓடுபாதையில் இருந்து பறக்க தொடங்கிய விமானத்தில், சிறிது நேரத்தில் அதில் இருந்த பயணிகளின் காது, மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூர் நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில், 166 பேர் பயணம் செய்தனர். ஓடுபாதையில் இருந்து பறக்க தொடங்கிய சிறிது நிமிடத்தில், அதில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு திடீரென மூக்கு, காதில் ரத்த கசிந்தது. சிலருக்கு மயக்கமும், தலைவலியும் ஏற்பட்டது. 

இதை பார்த்ததும், விமான பணிப் பெண்கள், உடனடியாக தலைமை விமானிக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, சம்பவம் குறித்து எடுத்து கூறினார். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவுபடி, மீண்டும் விமானம் மும்பை விமான நிலையம் சென்றது. 

அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர், விமானத்தில் ஏறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை கீழே இறக்கி உடனடியாக, விமான நிலைய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 

அவர்களுக்கு, டாக்டர்கள் அளித்த பரிசோதனையில், விமானத்தில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்க தவறியதால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிந்தது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

click me!