காங்கிரஸ் மூத்த தலைவரை தட்டி தூக்கிய மோடி… குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம விருது அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 25, 2022, 9:39 PM IST
Highlights

2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுல் நிறுவன சி.இ.ஒ. சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஒ. சத்யா நாதெல்லாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் எதிர்க்கட்சிகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் சிபிஎம்- இன் முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன்  விருது காங்கிரஸ் கட்சிக்குள்தலைமைப் பிரச்சினையால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் கிடைத்துள்ளது. ஆசாத் கட்சியில் மிகப்பெரிய மாற்றங்களையும், பெரிய பொறுப்புகளையும் கவனித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!