கொரோனா போரில் மற்றொரு மைல்கல்... இந்தியாவில் எத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Jul 21, 2021, 7:03 PM IST
Highlights

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 41.54 கோடியைக் கடந்ததுள்ளது. 

இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா போரில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பேராயுதமாக தடுப்பூசி திகழ்வதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 

எனவே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறையாக பதிவு செய்து, மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 51 லட்சத்து 36 ஆயிரத்து 590 முகாம்களில் 41 கோடியே 54 லட்சத்து 72 ஆயிரத்து 455 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 446 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 3, 03,90,687 பேர் கொரோனா  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 36,977 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் விழுக்காடு 97.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 42,015 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 24 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 07 ஆயிரத்து 170 ஆக குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.30 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 52 ஆயிரத்து 140 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 44 91,93,273 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.09 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.27 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 30 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 44 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

click me!