"தடுப்பூசி போடு.. பாகுபலியா மாறு"... நாட்டு மக்களுக்கு குடை பிடித்தபடி நச்சுன்னு அட்வைஸ் கொடுத்த பிரதமர்..!

Published : Jul 19, 2021, 11:30 AM IST
"தடுப்பூசி போடு.. பாகுபலியா மாறு"... நாட்டு மக்களுக்கு குடை பிடித்தபடி நச்சுன்னு அட்வைஸ் கொடுத்த பிரதமர்..!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். 

நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிநாடாளுமன்ற வளாகத்தில் குடை பிடித்தபடி பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்றப்பட வேண்டும். அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தடுப்பூசியைக் போட்டுக்கொண்டு பாகுபாலி போல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும். ஆகவே, அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். 

மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடினமான கேள்விகளை கேட்கட்டும். ஆனால், அமைதியான முறையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!