ஐஐடிக்கே இந்த நிலைமையா! கற்பித்தலில் காலியிடம் குறித்து மத்திய அரசு தகவல்

Published : Feb 10, 2022, 01:56 PM ISTUpdated : Feb 10, 2022, 01:57 PM IST
ஐஐடிக்கே இந்த நிலைமையா!  கற்பித்தலில் காலியிடம் குறித்து மத்திய அரசு தகவல்

சுருக்கம்

நாடுமுழுவதும், 23 ஐஐடி உயர் கல்விநிறுவனங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும், 23 ஐஐடி உயர் கல்விநிறுவனங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஐஐடியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்த புள்ளிவிவரங்கள் குறித்த விவரம்:

மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட விவரங்களின்படி ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 511 பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 4,370 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன..

பணியில் இருக்கும் 6,511 பேராசிரியர், உதவிப் பேராசிரியர்களில் வெறும் 12 சதவீதம் மட்டுமே பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர். ஆனால்,கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம்அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி எஸ்டி பிரிவில் 32 ஆசியர்களும், ஓபிசி பிரிவ்ல 462 பேரும் பணியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இடஒதுக்கீடு கொள்கையின்படி, எஸ்சி பிரிவுக்கு 7.5%, எஸ்டி பிரிவினருக்கு 15%, ஓபிசி பிரிவினருக்கு 27%, பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% வழங்கிட வேண்டும். அதாவது 59.5% ஆசிரியர்கள் இடஒதுக்கீடு முறையில்தான் நிரப்பப்பட வேண்டும்

நாட்டிலேயே மிகப்பழமையான, பெரியதாக இருக்கும் தான்பாத் ஐஐடியில், 57.2% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காரக்பூர் ஐஐடியில் 53.4% இடங்களும் காலியாக உள்ளன. டெல்லி ஐஐடியில் 9.4 %இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. ஆனால், 6.5 % பேர் மட்டுமே இதில் இடஒதுக்கீடு முறையில்வந்தவர்கள், மும்பை ஐஐடியில் 3.8%பேர், அதாவது 693 ஆசிரியர்கள் மட்டுமே இடஒதுக்கீடு முறையில் உள்ளனர்.

ஐஐடியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும், அரசின் நடவடிக்கைகள் என்ன என்று சசி தரூர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில் “ 2021, செப்டம்பரிலிருநது, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள், இடஒதுக்கீடு முறையில் காலியாக இருக்கும்பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்காக சிறப்பு ஆட்தேர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு
வந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி