தமிழில் கேள்விகேட்ட திமுக எம்.பி.: இந்தியில் பதில் அளித்த பியூஷ் கோயலால் மக்களவையில் சலசலப்பு

Published : Feb 10, 2022, 10:21 AM IST
தமிழில் கேள்விகேட்ட திமுக எம்.பி.: இந்தியில் பதில் அளித்த பியூஷ் கோயலால் மக்களவையில் சலசலப்பு

சுருக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று நடந்த அமர்வில் திமுக எம்.பி. கணேசமூர்த்தி தமிழலில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்ததால் பெரும் அமளி ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று நடந்த அமர்வில் திமுக எம்.பி. கணேசமூர்த்தி தமிழலில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்ததால் பெரும் அமளி ஏற்பட்டது.

மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கும் நீட் விவகாரம், ஐஏஎஸ் விதிகள் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நேற்று இந்தி, தமிழ் மொழிகள் குறித்த மோதலும் ஏற்பட்டது.

திமுக எம்.பி. கணேச மூர்த்தி தமிழலில் கேள்வி எழுப்பியதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்தது பெரும் சர்ச்சையில் முடிந்தது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியபோது, இந்தியாவில் அன்னிய முதலீடு வந்துள்ள விவரம் குறித்து திமுக எம்.பி. கணேச மூர்த்தி தமிழலில் கேள்வி எழுப்பினார். ஆனால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மொழிமாற்றம் செய்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், மறுபடியும் கேள்வியை கேளுங்கள் என்று திமுக எம்.பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு மத்திய அமைச்சர் கோயல் ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கணேச மூர்த்தி தெரிவித்தார்

அதுமட்டுமல்லாமல் தமிழலில் பேசுவேன் என்று நோட்டீஸ் அளித்துவிட்டேன், ஆங்கிலத்தில் தவிர வேறு எந்த மொழியில் பேசுவதாக இருந்தாலும் அதற்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்க வேண்டும் அதை அளித்திருக்கிறேன் என்று தெரிவித்தார்

ஆனால், அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ எனக்கு விருப்பமான மொழியில்தான் பதில் அளிக்க முடியும். நீங்கள் ஹெட்போன் மூலம் எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்து கேளுங்கள். எனக்கு விருப்பமான மொழியில்தான் பேசுவேன்” எனத் தெரிவித்து இந்தியில் பதில் அளி்த்தார்.

அப்போது பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி எழுந்து, “ ஒருமொழி ஒருதேசம் கிடையாது” என்று தெரிவித்தார். இதையடுத்து, தமிழகத்தைச்சேர்ந்த பல எம்.பி.க்கள் கோஷமிட்டனர். ஆனால், அப்போது மூத்த எம்.பி.க்களான தயாநிதி மாறன், கனிமொழி, டிஆர் பாலு ஆகியோர் அவையில் இல்லை.

ஆனால், மத்திய அமைச்சர் கோயல் தொடர்ந்து இந்தியில் பேசினார் அவர் பேசுகையில் “ நீங்கள் தமிழலில் கேள்வி கேட்டீர்கள். நான் இந்தியில் பதில் அளிப்பேன். அவையில் மொழிக்கு கட்டு்பபாடு இல்லையே” என்று அவைத்தலைவரிடம் தெரிவித்தார். 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செயல்பாடு குறித்து தமிழக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி கூறுகையில் “ அமைச்சர் ஆங்கிலத்தில் பேசாதபோது எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், கோயலுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும், சில நேரங்களில் மத்திய அரசுக்குஆதரவாக மற்ற எம்.பி,க்கள் சார்பாக பேசியுள்ளார். மத்திய அரசு அகங்கார மனநிலையுடன் தமிழகத்தை அணுகுகிறது. இந்தி மொழியை அடித்தொண்டையில் திணிக்க முயல்கிறது மத்திய அரசு இதற்கு ஒருபோதும் பணியமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

இதேபோல குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவிடம் ஆங்கிலத்தில் பதில் அளியுங்கள் என்று திமுக எம்.பி. டிஆர் பாலு கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அமைச்சர் வைஷ்ணவ் இந்தியில் பதில் அளித்தார்.

கடந்த 3-ம் தேதி திமுக எம்.பி. பி. வேலுசாமி உதான் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமானப் போக்குவரத்துஅமைச்சர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா இந்தியில் பதில் அளித்தார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சர் சிந்தியா ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும், இந்தியில் பேசுவது இந்தி தெரியாதவர்களை அவமானப்படுத்துவதாகும் என்று கேட்டுக்கொண்டார்.

 ஆனால், அதற்கு மத்திய அமைச்சர் சிந்தியா, “ நான் இ்ந்தியில் பேசினால் ஏன்உங்களுக்குபிரச்சினை வருகிறது. நான் இ்ந்தியில் பதில் அளித்தால் என்ன பிரச்சினை வரும். மொழிமாற்றம் செய்வோர்இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் மொழியில் மொழிமாற்றுவார்கள். இந்தியில் பதில் அளி்த்தால் சிக்கல் என்ன” எனத் தெரிவித்தார்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!