மீனை வற்புறுத்தி பீர் குடிக்க வைக்கும் வீடியோ வைரல்.. விளாசும் நெட்டிசன்கள்!

Published : Feb 26, 2025, 11:41 AM IST
மீனை வற்புறுத்தி பீர் குடிக்க வைக்கும் வீடியோ வைரல்.. விளாசும் நெட்டிசன்கள்!

சுருக்கம்

நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மீனை ஒரு கையால் பிடித்து, மற்றொரு கையால் மீனின் வாயில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடக கவனத்தை ஈர்க்கவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வைரல் ஆகவும் பலவிதமான முயற்சிகளை மக்கள் மேற்கொள்கிறார்கள். பல நேரங்களில் மிகவும் ஆபத்தான மற்றும் வினோதமான வீடியோக்களை படமாக்கி, அவற்றை சமூக ஊடகங்களில் பகிரவும் சமூக ஊடக பயனர்கள் தயங்குவதில்லை.

அப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கு பயன்படுத்தப்பட்ட விஷயத்திற்கு எதிராக பரவலான விமர்சனம் எழுந்துள்ளது. ஒருவர் ஒரு மீனின் வாயில் பீர் ஊற்றும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. இந்தியன் ரேர் கிளிப்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு ரோகு மீனை தனது ஒரு கையில் பிடித்து, மற்றொரு கையால் மீனின் வாயில் பீர் ஊற்றும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. மீன் பீர் குடிப்பதையும் வீடியோவில் காணலாம். அசாதாரணமான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்திற்கு வழிவகுத்தது. சிலர் வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக கருத்து தெரிவித்தபோது, வீடியோவைப் பார்த்த பெரும்பாலான மக்கள் இந்த கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கிங்ஃபிஷர் பீர் தான் இவர் மீனுக்கு குடிக்க கொடுக்கிறார். அதனால் வீடியோவுக்கு கீழே சிலர் 'கிங்ஃபிஷர்' என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் வீடியோவை விமர்சித்த பலரும் வீடியோவை பீப்பிள் ஃபார் தி எதிகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (PETA) டேக் செய்தனர். விலங்கு கொடுமையாக கருதி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (NYU) நடத்திய ஆய்வில் ஆல்கஹால் எக்ஸ்போஷர் (EtOH) மீன்களின் நடத்தையை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான மதுவை உட்கொண்டால் அது மீனுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மீன்களுக்கு வழிதவறவும், நீந்த முடியாமல் போகவும், விஷம் ஏறவும் இதன் மூலம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும் மது அவற்றின் நரம்பு மண்டலத்தையும், உறுப்புகளின் செயல்பாட்டையும் மோசமாக பாதிக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது.

ஓயோ ரூம்ஸ் அதிகம் முன்பதிவு செய்யப்படும் நகரம் எது.? தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கா.?

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!