அப்பவே சொன்னோம்... கர்நாடகாவை ஏ.டி.எம். போல பயன்படுத்தும் காங்கிரஸ்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Published : Oct 14, 2023, 03:03 PM IST
அப்பவே சொன்னோம்... கர்நாடகாவை ஏ.டி.எம். போல பயன்படுத்தும் காங்கிரஸ்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

சுருக்கம்

காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடாகவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மாநிலம் அவர்களின் ஏடிஎம் ஆகிவிடும் என்று கர்நாடக தேர்தலின்போது தான் கூறிய கணிப்பு இன்று நிஜமாகிவிட்டது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடக பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மத்தியப் பிரதேசம், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜீவ் கூறியிருக்கிறார்.

கூகுள் தேடலில் புதிய AI ஆப்ஷன்! மைக்ரோசாப்ட் பிங் ஐடியாவை காப்பி அடித்த கூகுள்!

பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், கர்நாடக வாக்காளர்களை தவறாக வழிநடத்தவும் காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார். 

"காங்கிரஸ் போலி உத்தரவாதங்கள், பொய்கள் மற்றும் ஊழல்களில் ஊறிப்போயிருக்கிறது. ஊழல் காங்கிரஸின் டிஎன்ஏவிலேயே கலந்து இருக்கிறது! இதை கர்நாடகாவில் பார்த்துவிட்டோம், இப்போது தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதே அரசியல் உத்தியைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்" என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் கதறி அழும் குழந்தைகள்! நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: ஹைதராபாத்தில் மெஸ்ஸி மேஜிக்.. முதல்வர் ரேவந்த் உடன் 2 கோல்கள்!
வாயை கொடுத்து மீசையை இழந்த LDF தொண்டர்.. இப்படி ஒரு சவால் தேவை தானா..?