ஃப்ளிப்கார்டில் ஆர்டர் பண்றீங்களா...! உஷார்...!

 
Published : Feb 02, 2018, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
ஃப்ளிப்கார்டில் ஆர்டர் பண்றீங்களா...! உஷார்...!

சுருக்கம்

Order In Flickcard ...! ... BEWARE!

ஃப்ளிப்கார்டில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக சலவை சோப்பு வந்து சேர்ந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆர்டர் செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவி மும்பை, பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் நாக்ராலி. ஐடி துறையில் பணிபுரியில் இவர், ஃப்ளிப்கார்டில் ரூ.55,000 மதிப்புள்ள ஐபோன் 8-ஐ ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிட்டார் நாக்ராலி. 

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி டெலிவரி செய்பவர் பார்சலைக் கொடுத்துவிட்டுச் சென்றள்ளார். நாக்ராலி உற்சாகமாக பார்சலை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஐபோன் பாக்சில் பின்க் நிற சோப்புக்கட்டி மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து, ப்ளிப்கார்டின் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். ப்ளிப்கார்ட் பிரதிநிதிகள் நாக்ராலியின் ஆர்டர் குறித்து ஆய்வு செய்து பார்த்து, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் ஆர்டரை டெலிவரி செய்துவிட்டோம் என்று அவரது புகாரை ரத்து செய்து விட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த நாக்ராலி, பைகுல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, டெலிவரி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!