
ஜல்லிக்கட்டு போராட்டம் அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்
இனி மேல் போராட்டக்காரர்களுடன் பேசி பயனில்லை என்ற சூழ்நிலையில் வேறு வழியின்றி பிரதமர் மோடியை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் பெற்று விட்டார்
நாளை காலை 11 மணி அளவில் பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளாதாக தெரிகிறது .போராட்டத்தில் ஈடு பட்டவர்களில் 10 பேர் முதலமைச்சருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்
ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .இதனைஅடுத்து ஒ பி எஸ் 9.30 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார்
பின்னர் சென்னை விமான நிலையதில் செய்தியாளர்களிடம் பேசிய ஒ பி எஸ் அவசர சட்டம் கொண்டு வர பிரதமரை வலியுறுத்த போவதாக தெரிவித்தார்