விவிபாட் ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணுங்க... போர்க்கொடி தூக்கும் 21 எதிர்க்கட்சிகள்!

By Asianet TamilFirst Published May 21, 2019, 6:52 AM IST
Highlights

ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவந்தன. கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
 

மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்றும் 21 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்க இருக்கின்றன,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் முடிந்துள்ளது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிகப்பட உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விவிபாட் இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்று பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் வீதம் 30 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டு எண்ணப்பட உள்ளன,
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சொல்லி வைத்தாற்போல எல்லா ஊடகங்களும் பாஜக அணி சராசரியாக 300-க்கும் மேல் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறிவந்தன. கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்க உள்ளனர். மேலும் ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த உள்ளனர்.   வாக்குப்பதிவின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில்  பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதையும், கொல்கத்தாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் குறித்தும் எதிர்க்கட்சிகள் புகார் அளிக்க உள்ளன. 

click me!