பஹல்காம் சம்பவம்! மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு!

Published : Apr 24, 2025, 09:51 PM IST
பஹல்காம் சம்பவம்! மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு!

சுருக்கம்

மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளன. 

Opposition parties fully support the central government's anti-terrorism measures: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நாட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டம் 

மேலும் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கேள்வி 

இதனைத் தொடர்ந்து பஹல்காம் சம்பவம் தொடர்பாகவும், அதன்பிறகு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் விளக்கினார்கள். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் இல்லாதது ஏன்? உள்ளிட்ட சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பாகிஸ்தானியர்களுக்கான விசா முழுமையாக நிறுத்தம்! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு 

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ''பஹல்காம் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பயங்கராதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த காலங்களில் எடுக்கப்பட்டது போல் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ராகுல் காந்தி உறுதி 

மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு எதிர்க்கட்சித தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "எதிர்க்கட்சிகள் அனைவரும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்தனர். பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளன" என்றார். பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வலியுறுத்தினார்.

ஆம் ஆத்மி சஞ்சய் சிங்

''முழு நாடும் கோபமாகவும், சோகமாகவும் உள்ளது. தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராணுவ வீரர்களுக்கு தெரியாமல் அந்த இடம் எப்படி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது? என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்? என்றோம்'' என்றார் சஞ்சய் சிங். 

திரிணாமுல் காங்கிரஸ்  

நாட்டின் நலனுக்காக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய் தெரிவித்தார். ''பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் நலனுக்காக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்கும் என்று நாங்கள் உறுதியளித்தோம்" என்று பந்தோபாத்யாய் அவர் கூறினார்.

திமுக திருச்சி சிவா

திமுக சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி, ''பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும். இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு நிற்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் திமுகவும், தமிழ்நாடும் ஒன்றாக நிற்கும்'' என்று தெரிவித்தார்.

எல்லையில் இந்திய ராணுவ வீரரை பிடித்துச் சென்ற பாகிஸ்தான்! அதிகரிக்கும் பதற்றம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!