ஓபன்ஹைமருக்கு 1954 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்வந்தார் என்று அமெரிக்க எழுத்தாளர் Kai Bird தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஜூலியஸ் ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கையை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனர் இயக்கி உள்ள படம் Oppenheimer. கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான Oppenheimer படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல அமெரிக்க எழுத்தாளர்களான Kai Bird and Martin J. Sherwin இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J Robert Oppenheimer என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்தே கிறிஸ்டோபர் நோலன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் இந்த புத்தகத்தின் இணை ஆசிரியர் Kai Bird, ஓபன்ஹைமருக்கு 1954 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்வந்தார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "1954ல் ஓப்பன்ஹைமர் அவமானப்படுத்தப்பட்ட பிறகு... நேரு அவரை இந்தியாவிற்கு வரும்படி அழைத்தார். அவரை இந்திய குடியுரிமை வழங்கவும் நேரு முன்வந்தார். ஆனால் ஆழ்ந்த தேசபக்தியுள்ள அமெரிக்கர் என்பதால் ஓப்பன்ஹெய்மர் அதை பெரிதாகக் கருதவில்லை என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் மிகப் பெரிய விஞ்ஞானியாகக் கொண்டாடப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓப்பன்ஹைமர் "ஒரு பயங்கரமான நீதிமன்றத்தில்" வீழ்த்தப்பட்டதாகவும், மெய்நிகர் பாதுகாப்பு விசாரணையில் அவரது பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டதாகவும் Kai Bird கூறினார்.
ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுகள் பற்றி ஓபன்ஹெய்மர் கலவையான உணர்ச்சிகளைக் கொண்டிருந்தார் என்றும் Kai Bird கூறினார். ஓபன்ஹைமர் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறினார். “ 1945க்குப் பிறகு, ஓப்பன்ஹைமர் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்தவற்றைப் படித்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனடியாக எரிந்து கொல்லப்பட்டதைப் புரிந்துகொண்டார். இரண்டு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அவர் உண்மையில் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கினார். ஆனால் உடனடியாகப் பேசத் தொடங்கினார். 1954 அக்டோபரில் ஓபன்ஹைமர் ஒரு அணு ஆயுதங்களை பயங்கரவாத ஆயுதங்கள் என்று கூறினார். அவை தற்காப்பு ஆயுதங்கள் அல்ல. மேலும் அவை அடிப்படையில் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட எதிரி மீது பயன்படுத்தப்பட்டன." என்று தெரிவித்தார்.
ஓபன்ஹைமர் இந்து ஆன்மீகம் மற்றும் பகவத் கீதையின் மீது ஈர்ப்பு கொண்டிருந்ததாக Kai Bird தெரிவித்தார். பகவத் கீதையை படிக்க வேண்டும் என்பதற்காக ஓப்பன்ஹைமர் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஒரே சமஸ்கிருத அறிஞரான ஆர்தர் ரைடரிடம் இருந்து சமஸ்கிருதம் பயின்றார். இதனால் தான் சமஸ்கிருதத்தில் கீதையைப் படிக்க முடியும் என்று அவர் கருதினார். நான் உலகத்தை அழிக்கும் காலனாகி விட்டேன்.. நான் உலகங்களை அழிப்பவன் என்று ஓப்பன்ஹைமர் கூறினார்.” என்று Kai Bird நினைவுகூர்ந்தார்.
உலக வரலாற்றில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளில் முக்கியமானது ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு சம்பவம். அமெரிக்கா கட்டவிழ்த்த அணு ஆயுத குண்டு வீச்சினால் ஏற்பட்ட வடு இன்னும் மாறாமல் இருக்கிறது. சுமார் 3 லட்சம் பேரின் உயிரை காவு வாங்கிய இந்த கொடூரம் மனித இனத்திற்கு மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் வரலாற்றையே மாற்றிய இந்த சம்பவத்திற்கு காரணமான அணுகுண்டை உருவாக்கிய ஓப்பன்ஹைமரை அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க அமெரிக்கா வலியுறுத்தியது.
ஆனால் ஏற்கனவே அமெரிக்கா செய்த செயலால் மன உளைச்சலில் இருந்த ஓபன்ஹெய்மர் அதற்கு மறுத்துவிட்டார். மறுபுறம் அமெரிக்கா, அணுகுண்டை உருவாக்கிய 4 ஆண்டுகளில் ரஷ்யாவும் அணுகுண்டை உருவாக்கியது. இதனால் ஓப்பன்ஹைமர் ரஷ்ய உளவாளி என்று சந்தேகித்த ரஷ்யா அவர் மீது நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் ஓப்பன்ஹைமர் ரஷ்ய உளவாளி தான் தீர்ப்பு வரவே ஓப்பன்ஹைமர் தேச துரோகி என்று அமெரிக்கா முத்திரை குத்தியது. எனினும் விசாரணை கமிஷனில் இருந்த வெளியான ஆவணங்களில் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவிற்கு எதிராக செய்யவில்லை என்பது அவர் உளவாளி இல்லை என்பது உறுதியானது. 1963-ல் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, என்ரிகோ ஃபெர்மி என்ற அமெரிக்காவின் உயரிய விருதை ஓப்பன்ஹைமருக்குக் வழங்கினார்..1967-ம் ஆண்டு, தொண்டை புற்றுநோயால் காரணமாக மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1,200 கோடிக்கு லண்டனில் மேன்ஷன் வாங்கிய இந்திய தொழிலதிபர் ரவி ரூயா!